அக்காள் கணவருடன் செல்போனில் பேசியதால் மனைவியை கணவர் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி பகுதியில் நித்தியானந்தன் என்ற லோடு வேன் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது அக்காள் கணவருடன் புவனேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசி வந்தது நித்தியானந்தனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அக்காள் கணவருடன் செல்போனில் பேசுவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து புவனேஸ்வரி தனது அக்காள் கணவருடன் பேசியதால் கோபமடைந்த நித்தியானந்தன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
அதன்பிறகு புவனேஸ்வரியின் சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நித்தியானந்தன் மச்சான் உனது தங்கையை கொன்றுவிட்டேன் என்று கூறிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நித்யானந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.