‘ரவுடி பேபி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் இவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் காஜல் அகர்வால் ரவுடி பேபி என்கிற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இயக்குகிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், லட்சுமிராய், சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ரவுடி பேபி படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. நடிகை காஜல் அகர்வால் அம்மா கேரக்டரில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.