ஈராக் நாட்டிலுள்ள தென்பகுதியில் நஸ்ரியா என்னும் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து தீயானது மளமளவென வார்டு முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 64 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகின்றது. மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈராக் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பாக்தாத் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து 82 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.