தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஓசூர் வழியாக தமிழகத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய காவல்துறையினர் அதன் உள்ளே சோதனை செய்துள்ளனர். பின்னர் அதில் பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பல தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் பான்மசாலா 12 பெட்டிகலும், பின் 1, 18, 800 மதிப்புடைய புகையிலை பொருட்கள் மற்றும் 10,500 ஹான்ஸ் பாக்கெட்டுகள் ஆகிய பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து வேன் டிரைவர் மற்றும் உடன் வந்த நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் யாரப், அஜாஸ் பாஷா என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் கர்நாடக மாநில பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி பகுதிக்கு புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.