Categories
கோயம்புத்தூர்

“அவனும் ஸ்டேட்டஸ் வச்சிருக்கான்” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. 4 நாட்களில் நடந்த சோகம்….!!

திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 24 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு கடந்த 7-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த கணேசன் எதற்காக அழுகிறாய் என்று அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவரது மனைவி தன்னை ஏற்கனவே ஒரு வாலிபர் காதலித்ததாகவும், தனக்கு திருமணம் முடிந்து விட்டதை அறிந்த அந்த வாலிபர் வாட்ஸ் அப்பில் விஷம் குடிப்பது போன்று ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாகவும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன் தனது மனைவியை வேறு ஒருவரும் ஏற்கனவே காதலித்திருப்பதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பிறகு வாழ்க்கையை வெறுத்த கணேசன் தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான 4 நாட்களிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |