Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க வந்தும் நீ திருந்தலையா….? தாயின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் தலையில் கல்லைப்போட்டு தாய் மகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணவாய்பாளையம் பகுதியில் நதியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சரவணன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் நதியா தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளை கவனிக்காமல் நதியா அடிக்கடி செல்போனில் பேசியதால் மாமியார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக மாமியார், மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு போது குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி நதியாவை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு நதியா தனது தாய் நாகமணி என்பவரது வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறி கதறி அழுதுள்ளார்.

ஆனாலும் அவர் செல்போன் பேசுவதை நிறுத்தாததால் நதியாவிற்கும், நாகமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தாயும், மகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் நதியா தூங்கிக் கொண்டிருக்கும் போது கோபத்தில் இருந்த நாகமணி ஆட்டுக் கல்லை எடுத்து நதியாவின் தலையில் போட்டுள்ளார். இதனால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து நதியா உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகளை கொலை செய்த குற்றத்திற்காக நாகமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |