Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

டிரைவிங்க் லைசென்ஸ் புதுப்பிக்க…. இனி அலைய வேண்டாம்…. வீட்டிலிருந்தே புதுப்பிக்கலாம்…!!!

டிரைவிங் லைசன்ஸ் என்பதுவாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது. இவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் பட்சத்தில் காவல்துறையினரால் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ் புதிதாக எடுக்கும்போது சில வருடங்களுக்கு மட்டுமே அது செல்லுபடியாகும். அதன் பிறகு அதை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு புதுப்பிப்பதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக ரூபாய் 400 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையொப்பம், பழைய ஓட்டுனர் உரிமம் ஆகியவை தேவை.

இதற்கு முதலில் போக்குவரத்துத் துறையின் https://parivahan.gov.in/parivahan/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் online services என்ற வசதியைத் தேர்ந்தெடுத்து Driving License Related Services என்பதை கிளிக் செய்யவும். பின்னர் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து DL services என்ற வசதியில் சென்று continue கொடுக்கவும். இதில் உஙக்ளுடைய டிரைவிங் லைசன்ஸ் நம்பர், பிறந்த தேதி, மாநிலம், RTO, PIN code ஆகியவற்றை பதிவிடவும். பின்னர் மொபைல் நம்பர், முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்டு proceed கொடுக்க வேண்டும்.

இதில் ஏதேனும் திருத்தம் செய்யவேண்டியிருந்தால் அதைச் செய்யலாம்.பின்னர் Renew DL என்ற வசதியில் சென்றால் ஒரு படிவம் வரும். அதைச் சமர்ப்பித்து proceed கொடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கட்டணம் செலுத்த நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுஎதாவது ஒன்றின் மூலமாகக் கட்டணம் செலுத்தலாம். இதனையடுத்து RTO அலுவலகத்துக்கு என்றைக்காவது ஒருநாள் அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்து, அந்த நேரத்தில் பழைய டிரைவிங் லைசன்ஸுடன் செல்ல வேண்டும். அங்கு சரிபார்ப்பு செய்யப்பட்டு உங்களுக்குப் புதியதக லைசன்ஸ் வழங்கப்படும்.

Categories

Tech |