Categories
தேசிய செய்திகள்

இந்தாண்டு 13 மொழிகளில் நீட் தேர்வு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் பாடவாரியாக ஏ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் இடம் பெறும், பி பிரிவில் உள்ள 15 கேள்விகளில் ஏதேனும் பத்து கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். வேதியியல், தாவரவியல், இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் ஏ, பி என்ற பிரிவுகளில் கேள்விகள் இருக்கும் என அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு புதிதாக பஞ்சாபி மற்றும் மலையாளத்தில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மாணவர்களுக்காக குவைத்தில் தேர்வு மையம் அமைக்கப்படும் அறிவித்துள்ளது. இது தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |