Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் நீட்டிப்பு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 2020 -2021 கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படும். மாணவர்கள் https://tngptc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |