Categories
மாநில செய்திகள்

“நன்றி மறந்தவன் தமிழன்”… கொண்டாடத் தெரியாதவன் தமிழன்…. பொன்.ராதாகிருஷ்ணன்.!!

”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

நேற்று  முன்தினம்  இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் இந்தியாவிற்கு   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று கூறியிருந்தார்.

Image result for பொன்.ராதாகிருஷ்ணன்

இதையடுத்து அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசு எப்படியாவது இந்தியை திணிக்க முயற்சி செய்வதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் கடுமையாக குற்றம் சாட்டினர்.

Image result for பொன்.ராதாகிருஷ்ணன் மோடி

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம்  பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன், பிரதமர் மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் தான் என்று அன்று பேசியதை தமிழர்கள் யாரும் கொண்டாடவில்லை” என்று கோபத்துடன் தெரிவித்தார்.

Categories

Tech |