Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.  அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 2,800 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. மேலும் 2000 டீசல் பேருந்துகள், மின்சாரப் பேருந்துகள் வாங்கிடவும் ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |