Categories
உலக செய்திகள்

இரத்தத்தானம் செய்வீர்…. சிகிச்சை பெறுவீர்…. தகவல் வெளியிட்ட மருத்துவர்கள்…!!

இரத்தத்தானம் செய்ய முன் வராவிட்டால் அவசியமற்றவை என்று கருதப்படும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படமாட்டாது என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா மாகாணத்தில் மருத்துவமனையின் மருத்துவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “ஜெனிவா மாகாணத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 பேர் இரத்ததானம் செய்வார்கள். ஆனால் தற்பொழுது வழக்கத்தைவிட கடந்த ஜூன் மாதத்தில் 800 பேர் மட்டுமே இரத்ததானம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிமாகியுள்ளதாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் இரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிகமான இரத்தம் தேவைப்படுகிறது. எனவே இரத்தத்தானம் செய்பவர்கள் இரத்தம் அளிக்க முன் வராவிட்டால் அவசியமற்றவை என்று கருதப்படும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட மாட்டாது” என மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |