Categories
மாநில செய்திகள்

“கேட்கும் போதே தலை சுத்துது” நல்லா இருக்கிறதை ஏன் பிரிச்சிக்கிட்டு…? – நடிகர் வடிவேலு…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு,  செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தி உள்ளார். அனைவரும் முன்வந்து உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் கொங்கு நாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் நல்லா இருக்கிற தமிழ் நாட்டை பிரிக்காதீர்கள். நான் அரசியல் பேசல. இதை கேட்கும் போதே தலை சுத்துது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |