மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி பகுதியில் ராக்கப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான இருளப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இருளப்பன் வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவ்வழியில் வேகத்தடை ஒன்று இருந்துள்ளது. அந்த வேகத்தடையில் மீது இருளப்பனின் மோட்டார்சைக்கிள் மேலே ஏறிக் கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சைடு ஸ்டாண்ட் தரையில் மோதியதால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருளப்பன் படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று இருளப்பனை விசாரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.