இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் புதிய சிம்கார்டு வாங்குபவர்களுக்கு சிம் ஆக்டிவேட் செய்வதாக சில மர்ம நபர்கள் போனிலிருந்து தொடர்புகொண்டு லிங்கை கிளிக் செய்ய சொல்லி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுவரை சில லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாககவும், சிம் கார்டு ஆக்டிவேட் செய்வதாக லிங்க் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.