வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.டி. மங்காடு பகுதியில் லால் ஷைன் சிங் என்பவர் மதபோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் அந்த வீட்டை கண்காணித்தபோது, ஜெபக்கூடம் போர்வையில் விபசாரம் நடப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நித்திரவிளை காவல்துறையினர் அந்த வீட்டில் புகுந்து சோதனை மேற்கொண்ட போது அங்கு 2 ஆண்கள், 4 பெண்களுடன் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் 6 பேரையும், வீட்டின் உரிமையாளர் லால் ஷைன் சிங்கையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஷைன், சிபி என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிடிபட்ட 4 பெண்களில் 2 பேர் 40 மற்றும் 55 வயதுடையவர்கள் என்பதும் மற்ற 2 பேர் 19 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு பிடிபட்ட பெண்களில் 2 பேர் தாயும் மகளும் என்ற அதிர்ச்சி தகவலும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. ஆகவே வறுமையின் காரணமாக பெற்ற மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போதகர் லால் ஷைன் சிங், ஷைன், சிபின் மற்றும் 40, 55 வயதுடைய 2 பெண்கள் என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனபின் 19 வயதுடைய 2 இளம்பெண்களையும் காவல்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.