Categories
உலக செய்திகள்

தந்தையின் பாசப் போராட்டம்…. 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!

காணாமல் போன மகனை 24 வருடங்களாய் தேடி அலைந்த தந்தைக்கு கிடைத்த வெற்றிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவிலுள்ள ஷாண்டோங் மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு வீட்டின் முன் ஜின்ஷேன் என்ற  2 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது ஜின்ஷேனை கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் தந்தை குவோ கேங்டாங் பல இடங்களில் அவனை தேடியுள்ளார்.  ஜின்ஷேன் கிடைக்கவில்லை என்பதால் அவனின் தந்தை குவோ கேங்டாக் சோர்ந்து விடாமல் அவனை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் ஜின்ஷேனின் புகைப்படம் வைத்த கொடியுடன் இருசக்கர வாகனத்திலேயே சுமார் 5 லட்சம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்துள்ளார். இந்த பயணங்களின் போது அவருக்கு பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் விடாமல் ஜின்ஷேனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் குழுவில் இணைந்தும் அவர் தனது மகனை தேடியுள்ளார்.  இதனை தொடர்ந்து சீன பாதுகாப்பு நல வாரிய அளித்த தகவலின் படி ஜின்ஷேனை மத்திய சீனாவில் DNA பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார். இந்த தகவல் அறிந்து சென்று ஜின்ஷேனை கண்ட குவோ கேங்டாக் மகிழ்ச்சியில் அவனை ஆரத் தழுவி கட்டி அணைத்து அழுதுள்ளார். இதனை அடுத்து 24  ஆண்டுகளாய் நடந்த பாசப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றிக்கு  பலரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வானது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவமானது 2015-ல் வெளியான Lost and Love திரைப்படத்தை அனைவருக்கும் ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Categories

Tech |