வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் , பின்ச் 30 ரன்கள், டர்னர் 24 ரன்கள் மற்றும் வேட் 23 ரன்கள் எடுத்திருந்தனர். இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
இதில் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இவர் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் , 7 சிக்சர்களை அடித்து விளாசி 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் பொறுமையுடன் விளையாடி 32 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டை இழந்து 142 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதில் ஆட்டநாயகன் விருது கிறிஸ் கெயிலுக்கு அளிக்கப்பட்டது.