தெலுங்கில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன். இதையடுத்து இந்த படம் தெலுங்கில் ராட்சசுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. ரமேஷ் வர்மா இயக்கியிருந்த இந்த படத்தில் பெல்லம்பொண்ட ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் தெலுங்கில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ராட்சசுடு-2’ என்ற டைட்டிலுடன் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்று சங்கிலியில் தொங்குவது போன்றும் கோட் அணிந்த ஒருவர் பிணத்தை தூக்கி செல்வது போன்றும் மிரட்டலான ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ரமேஷ் வர்மா இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் ரமேஷ் வர்மா சென்னை வந்திருந்தபோது நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் நடிகர் விஜய் சேதுபதி ராட்சசுடு-2 படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.