காவல்துறை அதிகாரியின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து காவல் பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் துரைசாமி. இவருக்கு தமிழ்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணிக்காக பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மாட்டுக்காரன் ஊர் பகுதியில் எதிர்பாராவிதமாக சாலையில் உள்ள தடுப்பு மீது மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ்பாண்டியன் படுகாயமடைந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தமிழ்பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தமிழ்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.