74 வயதான உங்களை 56 இஞ்ச் மார்பு மோடியால் எதுவும் செய்ய முடியாது என்று கார்த்திக் சிதம்பரம் ப.சிதம்பரத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளான இன்று வரின் மகனும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்னிட்டு ப.சிதம்பரத்திற்கு 2 பக்க கடிதத்தில் பாஜக அரசையும் , பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார்.அதில், அப்பா நீங்கள் இன்று 74 வயதை எட்டி உள்ளீர்கள், உங்களை எந்த 56_ஆலும் தடுத்து நிறுத்த முடியாது.
நீங்கள் உங்கள் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியதில்லை.ஆனால் நாட்டில் சிறு சிறு நிகழ்வு கூட பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது தற்போது உங்களுடைய பிறந்த நாளில் நீங்கள் எங்களுடன் இல்லை என்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது.எங்களோடு இணைந்து கேக் வெட்ட நீங்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதில் அவர் 74 என்று பா.சிதம்பரத்தின் வயதையும், 56 என்று பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பையும் சுட்டிக்காட்டிள்ளது குறிப்பிடத்தக்கது.
My letter to my father @PChidambaram_IN on his birthday #HBDPChidambaram pic.twitter.com/LCTV2Br4Ha
— Karti P Chidambaram (@KartiPC) September 16, 2019