Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் …. பங்கேற்கும் அதிபரின் மனைவி ….!!!

அமெரிக்க அதிபர்  ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன், ஒலிம்பிக்  தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார் . 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் – வீராங்கனைகள் அனைவரும் டோக்கியோவிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய  நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சொல்வார்கள்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படுபவரும் , அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் மனைவியுமான  ஜில் பைடன் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சில் கலந்து கொள்ள உள்ளார். இதனை அவருடைய அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |