விபத்தில் காயமடைந்த மூதாட்டியை இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது உறவினர் ஒருவருடன் தமிழக அரசின் மாதாந்திர முதியோர் உதவி தொகையை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வங்கியில் பணத்தை எடுத்து விட்டு மீண்டும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவ்வழியாக சென்ற ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தனது ஜீப்பில் மூதாட்டியை தூக்கி சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.