கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்து நான் பேச விரும்பவில்லை.
ஒன்றிய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகத்தை அடுத்து புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத புதுச்சேரியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.