கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள தெற்கு பகுதியில் நேற்றிரவு 90 நிமிடங்களில் 75 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இந்த கனமழையினால் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கார்கள் இரண்டு அடி உயர நீரில் புதைந்துள்ளன. இதனை அடுத்து வெள்ளமானது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்துள்ளதால் மின்சாரம் தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெரு வெள்ளத்தினால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மழையினால் தெற்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் ஏஜென்சி மற்றும் Hampshire நகரத்திலுள்ள Basingstokeல் இருக்கும் Loddon நதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கனமழையினால் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்லவோ, வாகனங்களில் பயணிக்கவோ வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதில் வசிக்கும் பணக்காரர்களும் தங்களின் வீடுகளை இழந்து முகாமில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.