தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் மன்ற தலைவர் பாலன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஒன்றியச் செயலாளராக இருக்கும் திருமணி என்பவர் முன்னிலை வகித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சுகுமாரன் நகர செயலாளர் முத்துவேல் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.