கோவில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூசாரி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் பூசாரி உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மங்கலமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.