லண்டனில் நாட்டுமக்கள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது.
லண்டனில் வரும் 19 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட உள்ளது. அதன் பின்பும் பொது போக்குவரத்து சேவைகளின் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக்கான் TFL நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.
அவர், பணியாளர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் TFL நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் விலக்கு பெற்றவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. இதனை TFL நிறுவனம் ஏற்றுக்கொண்டது. மேலும் நாட்டுமக்கள், பேருந்துகள், டாக்ஸிகள், டியூப், ரயில்கள் மற்றும் வாடகை வாகனங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
மேலும் ஜூலை 19ஆம் தேதி அன்று ஏறக்குறைய கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்று பிரதமர் கடந்த திங்கட்கிழமை அன்று உறுதி செய்தார். அப்போது அவர், இனிமேல் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை. அது அவர்களது விருப்பம் என்று கூறியிருந்தார்.
எனினும் பொது போக்குவரத்தின் போது கூட்டம் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அடைக்கப்பட்ட இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மக்கள், பிறரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.