Categories
உலக செய்திகள்

மாஸ்க் போடாம போகாதீங்க…. சிறை சென்ற முதியவர்…. தீர்ப்பு அளித்த நீதிபதி…!!

பல்வேறு குற்றங்கள் செய்த முதியவர் ஒருவருக்கு ஒரு மாத கால சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் என்ற நகரில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது இந்த உணவகத்திற்கு 69 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். அவரை மாஸ்க் அணிய சொல்லி உணவக ஊழியர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த முதியவர் உணவக ஊழியரை தாக்கியும் இந்த காட்சியைப் படம் பிடித்த பெண்ணையும் தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் பல்வேறு மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்ட  பெண்ணிடம் இருந்து 42000 சுவிஸ் பிராங்குகள் மோசடி செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட முதியவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |