Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரத்து…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மூலப் பொருள்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அடிப்படை சுங்க வரி விதிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனைப்போலவே ஆம்போடெரிசின் பி மருந்து தயாரிப்புக்கு தேவையான மருந்து மூலப் பொருள்களுக்கு ஆகஸ்டு 31 வரை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 18 வகை கொரோனா தொடர்பான உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைப்பு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |