Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து…. அதிமுக தொண்டர் போஸ்டர்…..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதி 4000, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் பால் விலை குறைப்பு ஆகிய முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதுமட்டுமல்லாமல் மகளிருக்கு இலவச பயணம் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சாதாரண பேருந்து கட்டணம் இருக்கும் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். மகளிருக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அதிமுக தொண்டர் ஒருவர் போஸ்டர் ஒட்டி உள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை அறிவித்த முதல்வர், தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்று அதிமுக உண்மை தொண்டன் என்றும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.

Categories

Tech |