தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ரெங்கராஜ் தன்னுடைய 7 பவுன் தங்க சங்கிலியை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்தார். இதனையடுத்து ரெங்கராஜ் மோட்டார் சைக்கிளில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று தங்கச்சங்கிலியை மீட்ட பிறகு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெங்கராஜனை சில மர்ம நபர்கள் கண்காணித்தனர். இதனையடுத்து நாட்டார்மங்கலத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்த ரெங்கராஜ் மீட்டுக் கொண்டு வந்த தங்கச்சங்கிலி பையை ஒரு ஆணியில் மாட்டினார்.
அப்போது அந்த மர்ம நபர்கள் ரெங்கராஜ் வீட்டிற்கு வந்து தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளனர். இதனையடுத்து ரெங்கராஜ் வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து விட்டு வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் ஆணியில் மாட்டிருந்த தங்கச்சங்கிலி பையை கொள்ளையடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து பாடலூர் காவல் நிலையத்தில் ரெங்கராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கசங்கிலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.