தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, சேலம், நெல்லை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் அரபிக் கடலுக்கு ஐந்து நாட்களும், கேரள கடல் பகுதிக்கு மூன்று நாட்களும் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.