தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மத்தியபிரதேச மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 50 சதவீதம் மாணவர்களுடன் கல்லூரியை திறக்கவும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.