ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகவுள்ளது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீசாக உள்ளது.
Tomorrow at 11 AM… #RoarofRRR 💥💥💥@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies #RRRMovie pic.twitter.com/DAGqmlhdqI
— Lyca Productions (@LycaProductions) July 14, 2021
மேலும் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.