Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

11-ம் தேதி தனியாக நின்ற சிறுவன்…. அட்ரஸ் வாங்கிய காவல்துறையினர்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் அறிவுரை….!!

காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை ரயில்வே காவல்துறையினர் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் 15 வயது சிறுவன் கடந்த 11-ஆம் தேதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரித்தபோது மராட்டிய மாநிலம் நாக்பூர் சேர்ந்தவர் என்பதும், ரயிலில் தவறுதலாக காட்பாடிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனிடம் வீட்டு முகவரி, பெற்றோரின் செல்போன் நம்பர் போன்றவற்றை பெற்றுக் கொண்டு உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் சிறுவனை தனியார் காப்பகத்தில் தங்க வைத்து இருந்த நிலையில் அவரின் பெற்றோர் காட்பாடிக்கு வந்தனர். அவர்களின் ஆவணங்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி சரிபார்த்து பெற்றோர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெற்றோர்களிடம் குழந்தைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Categories

Tech |