Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் கிடந்ததா….? மீட்கப்பட்ட கோவில் கலசங்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சுடுகாடு அருகே கிடந்த 3 கோவில் கலசங்களை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எடையபாளையம் சுடுகாடு பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தடியில் 3 கோவில் கோபுர கலசங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே இருந்த 2 கிலோ எடை கொண்ட மூன்று கலசங்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் யாரேனும் கோவில் கலசத்தை திருடி இங்கு போட்டு சென்றனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |