Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னது பெட்ரோல் இலவசமா….? வித்தியாசமான விளம்பர பலகை…. நிறுவனத்தினரின் புது ஏற்பாடு….!!

பனியன் நிறுவனத்தில் வித்தியாசமான முறையில் விளம்பரப் பலகை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வாவிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஈஸ்வரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து வித்தியாசமான விளம்பரப் பலகையை வைத்துள்ளனர். அதாவது அந்த விளம்பர பலகையில் பீஸ்ரேட் அடிப்படையில் ஓவர்லாக் டெய்லர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவை என எழுதியுள்ளனர். மேலும் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்தால் அவர்களுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும் அந்த விளம்பரப் பலகையில் எழுதியுள்ளனர்.

இந்த விளம்பர பலகையை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மின்கம்பங்கள் மற்றும் மரங்களில் தொங்க விட்டுள்ளனர். இதனை பார்த்ததும் ஏராளமான தொழிலாளர்கள் விளம்பரப் பலகையில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பணியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் கூறும்போது, பணியாளர்களின் தேவையை உணர்ந்து இவ்வாறு வித்தியாசமான முறையில் விளம்பரப் பலகை வைத்ததாகவும், தற்போது தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தொழிலாளர்கள் கிடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |