தடுப்பூசியை கட்டாயமாக்குவதன் மூலம்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்ற எண்ணமில்லை என ஜெர்மன்அதிபர் கூறியுள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சல் மெர்க்கல் தடுப்பூசி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் கூறியதாவது “ஜெர்மனி மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது உறுதி செய்யப்படும். ஆனால் அதற்காக அவர்களை பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைப் போல கட்டாயத்திற்கு உட்படுத்த மாட்டோம். அதற்கு பதிலாக சமூக இடைவெளியை பின்பற்றுதல், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை அதிகரித்தல் செய்யப்படும். மேலும் தடுப்பூசியை காட்டயமாக்குவதன் மூலம்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்ற எண்ணமில்லை.
மாற்றாக தடுப்பூசிகளை பற்றி விளம்பரப்படுத்துதல் மற்றும் மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் மூலம் தான் நம்பிக்கை பெற முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ஜெர்மனியில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நான்காவது அலையை நோக்கி நாடு நகர்வதற்குள் அதனை கட்டுப்படுத்துவதற்கு 85% பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர் குழு பரிசீலித்துள்ளனர்.