தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காந்தி மண்டபத்தில் பொது மக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.