Categories
அரசியல் மாநில செய்திகள்

#KamalHaasan: ”வீடியோ வெளியிட்ட ஆண்டவர்” இந்தியளவில் ட்ரெண்டிங்….!!

ஹிந்தி எதிர்ப்பு குறித்து மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது. ஆனாலும் இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் ,  நடிகருமான கமல்ஹாசன் ட்வீட்_டர் பக்கத்தில் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்டார்.அதில் , இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.

நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த ‘ஷா’வோ மாற்ற முயற்சிக்க கூடாது. ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம் நடைபெறும் என்று அந்த வீடியோ_வில் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து இந்தியளவில் #KamalHaasan   என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது.

Categories

Tech |