நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூரை அடுத்துள்ள வாழவந்தி நாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட காட்டுப்பட்டி பகுதியில் ஒருவர் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் விஜயகுமார்(35) என்பவர் அவரது வீட்டிற்கு பின்புறத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.