சமூக வலைத்தளங்களில் மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் அவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தளமாக தற்போது யூடியூப் இருக்கின்றது. இதில் மக்கள் தங்களின் தனித் திறமைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. இப்படி ஒரு சிறுவன் தமிழ்நாடு நியூஸ் சேனலில் செய்தி வாசிக்கும் நிகழ்ச்சியை போல பல கேரக்டர்களில் தன்னை தானே பல கெட்டப்போட்டு நடித்து வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது
ரித்விக் என்ற 7 வயது சிறுவன் யூடியூபில் கலக்கி வருகிறார். பிரித்து ராக்ஸ் என்ற யூடியூப் சேனலில் சிறுவன் நடிப்பில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ நான்கு நாட்களில் மட்டும் 3 லட்சம் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. அதில் பதிவிட்டுள்ள பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர் வீடியோ தற்போது மிகவும் பிரபலமடைந்து பெரும் வைரலாகி வருகின்றது. அந்த சிறுவனை பெண் தொகுப்பாளர், செய்தியாளர் மற்றும் விவசாயி சேர்ந்து நடித்து மிரட்டியுள்ளார்.