Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தப்பு பண்ணிட்டு இது வேறயா….? சரமாரியாக தாக்கப்பட்ட ஊழியர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

லாரியில் மணல் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி, கார்த்தி, மூர்த்தி என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் காரையூர் பகுதியில் லாரியில் மணல் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக ஊழியர்களான சுரேஷ் ,முருகராஜ் ஆகியோர் லாரியை நிறுத்தியுள்ளனர். அதன்பின் அவர்கள் கிராம அலுவலர்கள் மீது லாரியை ஏற்றுவது போல கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மூர்த்தி, பாலாஜி, கார்த்தி ஆகிய மூவரும் லாரியில் இருந்து இறங்கி வந்து சுரேஷ், முருகராஜ் ஆகியோரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பிய கிராம நிர்வாக ஊழியர்கள் காரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தி,கார்த்தி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |