தென்னாப்பிரிக்காவில் வன்முறை அதிகரித்து வருவதால் அதனை விளக்கும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தற்போது வரை 72 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு நகரில் மருத்துவமனைகளுக்கு தீ வைக்கப்பட்டு வருகிறது.
கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தற்போதைய அதிபரான சிரில் ராமஃபோஸா, 1990 வருடங்களுக்கு பின்பு நாட்டில் நடக்கும் மிக பயங்கரமான கலவரம் இதுதான் என்று கூறியிருக்கிறார்.