Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதை அனுமதிக்க மாட்டோம்…. எதிர்ப்பாளர்களின் போராட்டம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரான மணியரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் வைகரை இந்த போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் கர்நாடகாவில் புதிதாக அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து மிகவும் குறையும் போராட்டத்தை தலைமை தாங்கிய மணியரசன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது எனக்கூறி கர்நாடக முதலமைச்சர் ஆன திரு எடியூரப்பாவின் திருவுருவ பொம்மையை எரித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் போராட்டக்காரர்கள் கேட்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் அனைவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |