Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வாங்க ரொம்ப சிரமப்பட்டோம்… இப்போ இது வந்துடுச்சு… அரசின் தீவிர செயல்…!!

18 வயது பூர்த்தி அடைந்த நபர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்குவதற்காக புதிதாக இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களிலும், நகராட்சி, மாநகராட்சி மற்றும்  இணையதளம் மூலமாகவும் வாக்காளர்களின் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாக்கு அளிக்கும் மையங்களில் வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கே பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான நபர்களை  வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.

அதன்பின் புதிய வாக்காளர்கள் இடம் பெற்ற பட்டியல் ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்பட்டு வருகிறது.  இதனால் அவர்களின் அட்டைகளானது புனேயில் அச்சடிக்கப்பட்டு மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்டவர்களின்  வீடுகளுக்கு நேரில் தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. இதனை அடுத்து புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதற்கு 3 மாதங்கள் ஆகிறது. அதில் ஒரு சிலருக்கு அட்டை கிடைக்காமல் போன நிலையிலும், இதை பெறுவதற்கு பொதுமக்கள் பணம் செலுத்தி வாங்கி வருகின்றனர்.

இந்த காரணத்தினால் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வாங்குவதற்கு வசதியான முறையில் அந்தந்த மாவட்டங்களில் அச்சிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும்  அட்டைகள் அச்சிடும் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு அச்சிடும் இயந்திரம் வந்துள்ளது. மேலும் இந்த இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது எனவும், வாக்காளர்களுக்கு தாமதமில்லாமல் அட்டை வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |