2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு பரிந்துரைகளை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.
அந்தவகையில் 2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட இருக்கும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை https://padmaawards.gov.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேவைக்கான அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.