Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு பத்தாது… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… அரசின் செயல்…!!

குறைவான அளவில் பேருந்துகள் அனுமதித்ததால் பொதுமக்கள் பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணத்தினால் சென்ற 2 மாதங்களாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததினால் போக்குவரத்துக்கு தற்போது அனுமதி வழங்கபட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.

அதன்பின் தாளவாடி பகுதியிலிருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதால் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடு வழிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்கள் கூட்டமாக பயணம் செய்து வருகின்றனர். மேலும் இதன் மூலமாக கொரோனா தொற்று திரும்பவும் பரவக் கூடும் என அச்சம் அடைந்து மலை கிராம மக்கள் அதிக பேருந்துகள் இயக்க அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |