பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆளும்கட்சி 4 வருடங்களில் 220 கோடி நிதியை சட்டவிரோதமாக வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்ற கட்சி 2009 ஆம் வருடத்திலிருந்து 2013ஆம் வருடம் வரை சுமார் 220 கோடி நிதியை பிற நாட்டிலிருந்து சட்டவிரோதமாக பெற்றிருக்கிறது. அக்பர் எஸ் பாபர் இது குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த கட்சிக்கான வங்கி கணக்குகளின் முழு தகவல்கள், நாட்டில் மற்றும் வெளியே கட்சியின் கணக்குகள் தொடர்பில் முழு விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் நாம் பெற்ற நிதி எவ்வளவு என்று தெரிய வேண்டும். மேலும் நான் குறிப்பிட்டதைவிட அதிகமான பணம் அதில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அவர் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.